இதை என் முந்தைய பதிவு போலவே இன்னொரு அனுபவம்..
ஒரு திங்கள் கிழமை காலையில் வழக்கம் போல ஒரு மீட்டிங் துவங்குவதற்காக காத்திருக்கும்போது சம்பிரதாயமாக மற்றவருடன் பேசிக்கொண்டிருந்தேன்..
உரையாடல் தமிழில்..
உடன் பணி புரியும் அமெரிக்க பெண்மணி..
"சென்ற வீகென்ட் எப்படி செலவழித்தீர்கள்"
"பிள்ளைகளுடன் மால் சென்றிருந்தேன்.. வேறு விசேஷமில்லை.. உங்களுடைய வீகென்ட் எப்படி?" என்றேன்..
"மிக அருமையாக இருந்தது.. ஊரிலிருந்து என் மாமியார் வந்திருந்தார். நானும் என் கணவரும் மாமியாருடன் சென்று வெட்டிங் கௌன் (wedding gown) வாங்கினோம்.."
எனக்கு இந்த வாக்கியம் அபத்தமாக தெரிந்தது.. வெட்டிங் கௌன் என்கிறார். மாமியார் என்கிறார். ஒரு வேளை கல்யாணத்திற்கு முன்னேயே மாமியார் என்கிறாரோ? அவ்வளவு அன்யோன்யமோ? நம்ம ஊரிலும் இருக்கிறார்களே.. என்று பலவாறு சிந்தனை பறந்தது..
இருந்தாலும் குழப்பம் பெரிய அளவு என் முகத்தில் தெரிந்ததை பார்த்து, அவரே..
இருந்தாலும் குழப்பம் பெரிய அளவு என் முகத்தில் தெரிந்ததை பார்த்து, அவரே..
"வெட்டிங் கௌன் என் மாமியாருக்கு! சமீபத்தில் விவாகரத்து பெற்ற அவர் மறுமணம் செய்துகொள்ளப்போகிறார்.. அதற்காக தான்.. " என்றார்..
என்னிடம் மறு பேச்சில்லை!
18 comments:
ஒரு தடவை கல்யாணம் செய்தவுடன் புரிஞ்சக்காமல் இன்னொரு கல்யாணமா என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது.. அவிங்க நம்மள மாறி ஷார்ப் இல்லீங்கோ
நல்லா சொன்னீங்க சூர்யஜீவா!
சிரித்து விட்டேன். சூர்யா சொன்னதைப் பார்த்து இன்னமும் சிரித்துக கொண்டேயிருக்கின்றேன்.
தவறாமல் வந்து ஊக்குவிப்பதற்கு நன்றி ஜோதிஜி!
நல்ல அனுபவம்..
ஹா ஹா ஹா. செம காமெடி.
வருகைக்கு நன்றி, ரமேஷ் பாபு!
வருகைக்கு நன்றி, பிரசாத். உண்மையிலேயே அசந்து தான் போயிட்டேன்!
அருமை நண்பர் சூர்யாவுக்கு எப்பவும் 'அவங்க' மேல கோபம் தான்...கூடவே Statistics வச்சிருப்பார்...-:)
உங்கள் பதிவையும்...அவர் பதிலையும் ரசித்தேன்...
வருகைக்கு நன்றி, ரெவெரி
அட கடவுளே
//
என்னிடம் மறு பேச்சில்லை!//
same blood
நல்ல காமெடி..
யதார்த்த நிகழ்வுகளை அழகாக தருகிறீர்கள்,
வருகைக்கு நன்றி, ராஜா..
நன்றி ரிஷபன்..
அங்கு அவர்களுடன் இருக்கும் தங்களுக்கே
அதிர்ச்சியாக இருந்தால் எங்களுக்கு எப்படி இருக்கும்
சொல்லிச் சென்ற விதம் மிக மிக அழகு
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கு மிக்க நன்றி, ரமணி..ஊக்குவிப்பதற்கு நன்றி. மேலும் எழுத முயற்ச்சிக்கிறேன்..
Post a Comment