மறுபடியும் ஆட்சி அமைக்க இருக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இன்று தமிழ் நாட்டில் எங்கும் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும் நகரம் திருப்பூர். பல பேரின் பல்வேறு தவறுகளுக்கு விளைவாக இன்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.
இது ஒரே நாளில் தீர்க்கக்கூடிய பிரச்சனையா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். இதற்கு அந்த தொழில் வல்லுனர்கள் ஒரு தீர்வை சொல்லமுடியும் என்றே நான் நம்புகிறேன். அதை முழுமையாக தீர்க்க ஒரு வருடமோ இல்லை இன்னும் அதிக நாட்களோ ஆகலாம். அதுவரை முதலாளிகள் காத்திருக்கலாம். ஆனால் தொழிலாளிகளை காத்திருக்க சொல்வது பிரக்டிகல் தீர்வில்லை.
தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று எல்லோருக்கும் மிக்சி மற்றும் கிரைண்டர் என்பது. இதற்கு தேவையான மிக்சி மற்றும் கிரைண்டர் ஆர்டர் மொத்தத்தையும் கோவை தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவர்களை திருப்பூரில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதை ஒரு நிபந்தனையாக வைத்தால் குறுகிய காலத்தில் இந்த தொழிலாளர்களுக்கு வேலை மறுபடியும் கிடைக்கும். உண்மையாக உழைத்து குடுபத்தை காப்பாற்ற நினைக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெஞ்சார வாழ்த்துவார்கள்!
இதன் மூலம் மேலும் ஒரு பலன் என்னவென்றால் இலவசங்களால் மக்களுக்கு மட்டுமில்லாமல் பலன் இந்த தொழிலாளர்களுக்கும் கிடைக்கும்.
இதுவே புதிய அரசு திருப்பூருக்கு செய்யக்கூடிய உடனடி உதவி!
5 comments:
வருகின்ற இருபதாம் தேதி இது வரையிலும் நடந்து முடிந்த அத்தனை விசயங்களையும் எடுத்துக் கொண்டு புதிய அரசு சென்னைக்கு வரச் சொல்லி இருக்கிறது. இது போக இந்த தொழில் நுட்ப குளறுபடிகளை உருவாக்கிய அண்ணா பல்கலைக்கழகம் மக்களையும் கூட்டத்தில் கல்ந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது நண்பரே. முயற்சி நன்றாக உள்ளது. ஜெ நினைத்தால் சாதிக்கமுடியும். பார்க்கலாம்.
உங்களுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி, ஜோதிஜி.. இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!
வேலவன் பதிவில் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லைன்னு உங்கள் பின்னூட்டம் கண்டேன்.
இதையே நானும் சொன்னால் அதெல்லாம் முடியாது "You are with us or Not with us" என்கிற ஜார்ஜ் புஷ் கோட்பாடு மாதிரி ஒன்னு நீ திமுக அல்லது அதிமுக என்று பின்னூட்டம் போடறவங்களை நினைச்சா சிரிப்பார்ய் வருகிறது:)
ராஜ நடராஜன்.. நீங்கள் சொல்வது உண்மை. தி மு க வை விமர்சித்தால் அ தி மு க என்ற simple equation கடுப்பேத்துகிறது!
உங்கள் இலவச திட்ட ஒருங்கிணைப்பு நல்ல முனைப்பு
Post a Comment