Thursday, March 17, 2011

புள்ளி(யில்லாத) ராஜா!



விகிலீக்ஸ் இந்தியா குறித்து  வெளியிட்டுள்ள  ரகசியங்களில் பெரிய அளவு பரபரப்பை உருவாக்கி இருப்பது, பார்லிமென்ட்-இல் ஒரு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட லஞ்சம் கொடுத்த விவகாரம். மன்மோகன் பிரதமராக இருக்க தகுதியில்லாதவர் (உண்மை தானே) என்று பி ஜே பி , கம்யூனிஸ்ட் என்று எல்லோரும் உரக்க குரல் கொடுக்கிறார்கள். 

மன்மோகன் வழக்கம் போல், 'எவ்வளவோ பாத்துட்டோம். இத பாக்க மாட்டோமா' என்று பேசாமல் இருக்கிறார். 

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி, இதற்கு பதிலளிக்கையில்  எதிர்கட்சிகள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள். Manmohan Singh is a "spotless Prime Minister" என்று கூறியுள்ளார். "spotless prime minister" என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு இது இல்லை என்றாலும், மன்மோகன் சிங்கிற்கு பொருந்தக்கூடிய மொழிபெயர்ப்பு..

மன்மோகன் சிங் ஒரு "புள்ளியில்லாத ராஜா"!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள்!

bandhu said...

வருகைக்கு நன்றி, கொச்சுரவி..

அன்புடன் மலிக்கா said...

நானும் வந்து சென்றேன் தங்களின் தளதிற்கு..வாழ்த்துக்கள்..

bandhu said...

மிக்க நன்றி 'அன்புடன் மலிக்கா'