Tuesday, February 10, 2015
மன்மோஹனின் நெருங்கிய நண்பர்!
டிபெரியஸ் (Tiberius) 14 AD முதல் 37 AD வரை ஆட்சியில் இருந்த ரோமாபுரி மன்னன். வரலாற்றில் அவர் ஒரு கொடுங்கோல் மன்னனாக பதிவு செய்யப் பட்டிருக்கிறார் (மாற்று தகவல்களும் உண்டு) அவரை சதி மூலம் கொன்று பதவிக்கு வந்தவர் அவர் கொள்ளு மருமகன் (grand nephiew) கலிகுலா (Caligula) டிபெரியஸ் இறக்கும்போது கலிகுலாவிடம் சொன்னது..எப்படியாவது மக்களை டிபெரியஸ் நல்லவன் என்று சொல்ல வேண்டும். அது ஒன்றே நான் கேட்கும் உதவி என்றானாம். அடுத்து வந்த கலிகுலாவின் மிருகத்தனமான கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் எல்லோரும் 'இவனை விட டிபெரியஸ் எவ்வளவோ நல்லவன்' என்று சொன்னார்களாம்!
வரலாறு மறுபடி திரும்புகிறது
மௌனசாமியாக இருந்து குடி கெடுத்த மன்மோகனிடம் இருந்து பிடுங்கி மோடியிடம் அரசை கொடுத்தால், அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்தது போல் இருக்கிறது!
நூறு நாட்களில் கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவேன்.. (அதுவும் ஆளுக்கு ஒரு லட்சம்!)
இன்சூரன்ஸ் தனியார் மயமாகாது
ஆதார் அட்டை தேவையில்லை..
அணு ஒப்பந்தம் எல்லோருக்கும் ஏற்றது போல நிறைவேற்றப் படும்..
...
...
எல்லாமே மறந்து விட்டது போல இருக்கிறது. வேலையற்ற வேலையாக இந்துக்கள் பத்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.. கோட்சேக்கு சிலை..பட்டேலுக்கு உலகத்திலேயே பெரிய சிலை... அதானிக்கு வெளிநாட்டில் தொழில் தொடங்க 1 பில்லியன் டாலர் கடன் (ஸ்டேட் பேங்க் மூலம்).. அணு ஒப்பந்தத்திற்கு கிட்ட தட்ட மண்டியிட்டு ஒப்புக் கொண்டு கையெழுத்து..'எளிமையாய்' 11 லட்சத்தில் சூட்..
நல்ல வேளை .. .டில்லியில் தோத்தது பிஜேபி.. இதை ஒரு wakeup call என உணர்ந்து வெறும் விளம்பரத்தை விட்டு உண்மையில் ஏதாவது பண்ணினால் தேவலாம்!
இப்போது சொல்லுங்கள்..
மன்மோகனே நல்லவர் போல இருக்கிறதே என்று எண்ண வைத்த மோடி தானே மன்மோகனின் நெருங்கிய நண்பர்?
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Subscribe to:
Posts (Atom)