பார்கின்சன் சின்ட்ரோம்!
இதை கேட்டவுடன் மனக்கண்ணில் தெரிவது பாதித்தவரின் கை நடுக்கம் தான்! நாம் நினைவிலிருத்தி செய்யாத தினசரி செயல்களான சாப்பிடுவது.. குளிப்பது.. உடை உடுத்துவது.. காப்பி குடிப்பது என்று எந்த செயலையுமே பிறர் உதவி இல்லாமல் செய்ய இயலாமை பெரிய கொடுமை!
லிப்ட் லாப் டிசைன்ஸ் ஒரு சமீபத்தில் துவக்கப்பட்ட கம்பெனி. இவர்களின் முதல் ப்ராடக்ட் லிப்ட்வேர் (LIFTWARE)
பார்கின்சன்ஸ் பாதித்தவர்கள் சாப்பிடுவதை எளிதாக்கி இருக்கிறது இந்த கண்டுபிடிப்பு. இவர்கள் கண்டுபிடித்துள்ள ஸ்பூன் உபயோகித்து சாப்பிட்டால் 70% வரை கை நடுக்கத்தை அந்த ஸ்பூன் உணராமல் செய்துவிடுகிறது! இதனால் பிறர் உதவியின்றி இவர்களால் சாப்பிட முடியும் என்பது மட்டுமல்ல. பொது இடங்களில் சாப்பிட முடியாமல் தடுமாறுவதையும் குறைக்கும்!
இந்த ஸ்பூனின் விலை $295.00. கொடுக்கும் நிம்மதியோ கணக்கில் அடங்காதது. இந்த கம்பெனியின் சி இ ஒ ஒரு அமேரிக்கா வாழ் இந்தியர். இது நமக்கெல்லாம் ஒரு பெருமை!
இந்த கம்பெனி இணையத்தளம் https://www.liftlabsdesign.com/
10 comments:
பயனுள்ள பதிவு மற்றும் கண்டுபிடிப்பு .பாராட்டியே ஆக வேண்டும்
வருகைக்கு நன்றி ஜெயகுமார் சார். நீங்கள் எழுதிய கணித மேதை ராமனுஜம் குறித்த பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!
பயனுள்ள தகவல்...... என் அலுவலகத்திற்கு வரும் ஒரு வங்கி அதிகாரிக்கு இந்த பிரச்சனை உண்டு. காணொளியின் சுட்டியை அவருக்குத் தந்துவிடுகிறேன்.....
நன்றி வெங்கட். மேலதிக தகவல் வேண்டுமானால் இன்னும் ஒரு கமெண்ட் போடவும்..
உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...
நல்லதொரு கண்டுபிடிப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.இப்பதிவினை முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி தனபாலன்.. என் தளம் .com -இல் முடிகிறது. பார்க்கிறேன் என்ன பிரச்சனையை என்று. கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.
வருகைக்கு நன்றி அன்பு துரை. முகநூலில் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி..
இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா.
Post a Comment