தமிழில் இது வரை வந்த மிக சில Crime Thriller வகை படங்கள் பெரும்பாலும் நேர் கோட்டில் செல்லும் கதையை வைத்தே வெளி வந்துள்ளன. அதாவது குற்றங்களின் நிகழ்வு. துப்பறிதல். வில்லனை அடைதல் என்ற நேர் கோட்டிலேயே பயணித்துள்ளன.
பெரும்பாலும் மற்ற எல்லாவற்றையும் காட்டி விட்டு முகத்தை மட்டும் காட்டாதது மட்டும் பெரிய சஸ்பென்ஸ் - ஆக இருந்து வந்துள்ளது.
இவை இரண்டு விஷயத்திலுமே முற்றிலும் மாறு பட்ட படம் யுத்தம் செய்!
ஒரு விஷயத்தை சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக கதையை வளர்த்து கிட்ட தட்ட பாதி படத்தில் அதற்க்கு முற்றிலும் மாறான கோணத்தில் கதை திருப்பவதில் மிஸ்கின் பெரிய வெற்றி பெற்றுள்ளார்! த்ரில்லர் வகை படங்களில் முன்னோடியான Psycho படத்தில் இதே உத்தியை கையாண்டிருப்பார் ஹிட்ச்காக்! இது கத்தி மேல் நடப்பது போன்றது. இதில் முக்கிமானது இந்த மாறுபட்ட கோணங்களின் blending and transition. இந்த விதத்தில் மிஸ்கின் அருமையாக இதை கையாண்டிருக்கிறார்!
இரண்டாவது பார்வையாளர்களை உள்ளிழுக்கும் கலை. பார்ப்பவரும் புத்திசாலிதான். எல்லாவற்றையும் சொல்லித்தான் விளக்கவேண்டும் என்பதில்லை. Being suggestive than being explicit adds an element of mystery and when the viewer understands that suggestive thing, he feels better about the story as well as himself! Sixth Sense படத்திலும் சியாமளன் இதை பண்ணியிருப்பார். கொஞ்சம் கொஞ்சமாக நாமும் இந்த படத்தில் ஒரு பாகமாகி விடுகிறோம்!
யாரை எந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டும் என்று மிஸ்கின் தேர்வு செய்வது அவரின் மிக பெரிய பலம்! மிக புத்திசாலித்தனமாக he exploits the off screen image! இதிலும் அவர் மிக வித்தியாச படுகிறார். எல்லோரும் Y G Magendra வை ஒரு நகைச்சுவை நடிகராக பார்த்த போது, தொலைகாட்சியில் ஒரு நல்ல character role artist -ஆக பார்த்த போது, மிஸ்கின் அந்த பிம்பத்தை மட்டும் மிக அழகாக உபயோக படுத்தியுள்ளார்! ஒரு மென்மையான மனிதர் மூர்கமாக மாறுவதை காட்டும்போது அதன் maximum effect இந்த casting -இனால் வருகிறது!
மொத்தத்தில், யுத்தம் செய் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்!
மிஸ்கின் should be proud of this achievement!
6 comments:
உங்கள் வலைத்தளம் இப்போதுதான் எனக்கு தெரிந்தது. நல்ல அமைப்பு. எளிமையான ஆனால் அழுத்தமான கருத்துக்கள். எங்களைப்போல எல்லாம் "வத வத "வென எழுதி கடுப்பேத்தாமல் மிக அழகாக சுருக்கமாக எழுதுகிறீர்கள். மென் பொருள் வித்தகர் அல்லவா?!
என் வலைத்தளம் வந்ததில் மகிழ்ச்சி !
எனக்கு சினிமாவில் அதிலும் தமிழ் சினிமாவில் பெரிய நாட்டம் இல்லை. மற்ற, உங்களின் அரசியல் சமுதாய கருத்துக்கள் ஏற்புடையது.
வருகைக்கு மிக்க நன்றி, கக்கு-மாணிக்கம்!
பந்து நீங்க சொன்னது சரியான விடை., ஆகவே உங்களது பின்னூட்டத்தை கொஞ்சம் அளிக்கவேண்டியதாய் போச்சு, நாளை அதனை போட்டுவிடுகிறேன்
எனக்கும் சினிமாவில் தற்சமயம் அதிக நாட்டமில்லை. இருப்பினும் தாங்கள் ஒரு விமரிசனம் போல எழுதியிருப்பதைப் பாராட்டுகிறேன். சினிமா மோகம் உள்ளவர்களுக்கு அது பயன் படும். 28.02.2011 அன்று என் வலைப்பூவுக்கு (உலக்கை அடி) வருகை தந்து பாராட்டியுள்ளீர்கள். அதை நான் இன்று 2.3.11 அன்று தான் அதுவும் தற்செயலாகப் பார்த்தேன். மிக்க நன்றி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வருகை தாருங்கள். WELCOME.
வருகைக்கு நன்றி, ஷர்புதீன். It was a good puzzle.
வருகைக்கு நன்றி, கோபாலக்ருஷ்ணன் சார்! நானும் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா மோகத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறேன். அது மோகம் தான் என்று தெரிந்து கொண்ட அளவில் முன்னேறியிருக்கிறேன்!
Post a Comment